மலபார் சிக்கன் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் – 3
வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1 துண்டு
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சிக்கன் ஊற வைப்பதற்கு:
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை – 1/2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் லெக் பீஸை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அதில் கத்தியால் கீறி விட்டுக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸ் மற்றும் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு கடாயில் , தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி ,அதில் சிக்கன் துண்டுகள் , மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், மலபார் சிக்கன் ரோஸ்ட் தயார் !!!