கார்த்தி, சூர்யா இருவரும் இணைந்து எடுத்து கொண்ட முதல் செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி டுவிட்டரில் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி சூர்யாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த செல்பி எடுக்கப்பட்டது என்றும், இதுதான் நாங்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட முதல் செல்பி என்றும் பதிவிட்டுள்ளார். பாரிஸ் நகரில் இருக்கும் ஈஃபிள் டவர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.