Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு இதை செய்து தாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை….!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் வசதிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இங்கு  வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனைதொடர்ந்து மழை நீருடன் கழிவு நீர் கலந்துவிடுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |