டெல்டா வகை கோவிட் வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ் மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது; அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தற்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளில் 75 சதவீதத்தினர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது ஆய்வில் தெரிவந்து உள்ளது.
இதன் பாதிப்பையும் பரவலையும் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், பல ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது. வளர்ந்த நாடுகள் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கடைத்தால் மட்டுமே, கோவிட் பாதிப்பில் இருந்து முழுமையா விடுபட முடியும் என கூறியுள்ளது.