Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”உயர்வுடன் நிறைவடைந்த பங்கு சந்தை” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி…!!

இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 38,014 புள்ளிகளுடனும் , நிஃப்டி  11,274 புள்ளிகளுடன் உயர்ந்து வணிகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்பையும் , சலுகையையும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இன்று காலை தொழில் துறை பெரு நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடிக்கு அரசு வரிச்சலுகை அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.இதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தை பங்குசந்தை அடைந்தத்தது.

காலையிலே சற்று உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்  மத்திய அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்தது.மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2000 புள்ளியை தாண்டியது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1921 புள்ளிகள் உயர்ந்து 38,014_களிலும் , தேசிய பங்குச்சந்தை  நிஃப்டி 569 புள்ளிகள் அதிகரித்து 11,274_களிலும் வணிகத்தை நிறைவு செய்தது.  உயர்வுடன் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |