Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. சட்டென நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேன் மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள உப்போடை கிழக்குத் தெருவில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வயதில் சரண்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சரண்யா மீது அவ்வழியாக வந்த காய்கறி வேன் மோதியது.

இதனால் குழந்தை சரண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சொக்கலிங்கம் கொடுத்த புகாரின்படி ஆமத்தூர் காவல்துறையினர் வேனை ஓட்டிவந்த உசிலம்பட்டியை சேர்ந்த சசிகுமரன் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |