Categories
தேசிய செய்திகள்

திருமண மண்டபத்தில் போலீஸ் ரெய்டு… பின்வாசல் வழியாக ஓட்டம் பிடிக்க மாப்பிளை பெண்ணு… வைரலான சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் விதிமுறைகளை மீறி திருமணம் நடத்திய காரணத்தினால் போலீசார் ரெய்டு வந்தபோது மணமகளும் மணமகனும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், பலசூர் பகுதியில் மங்கள நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் கொரோனா விதிகளை மீறி அதிகம் பேர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். இதை அறிந்த மணப்பெண்ணும், மணமகனும் ஓட்டலை விட்டு பின் வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் சோதனை நடத்திய போது அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஹோட்டல் ஓனருக்கு 3000 ரூபாயும், திருமணத்தை நடத்தியும் மணமகன் வீட்டாருக்கு 5000 ரூபாயும் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Categories

Tech |