தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கைது வாரன்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் தங்கள் சொந்த தேவைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.