மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்யாண மாப்பிள்ளை இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி ராமநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் , ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, மணமகனின் குடும்பத்திற்கு தங்கமும் பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டன. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் உறவினர்களிடம் அதிகமாக வரதட்சணைகேட்டு தகராறு செய்தனர்.
அந்த குடும்பம் 21 கால் நகங்கள் கொண்ட ஆமை மற்றும் ஒரு கருப்பு லாப்ரடோர் நாய் ஆகியவற்றை வரதட்சணையாக கோரியதால் அந்த கல்யாணம் நின்று போனது . அந்த கல்யாண மாப்பிள்ளை , ஏற்கனவே மணப்பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து ரூ .2 லட்சம் ரொக்கமும் 10 கிராம் தங்கமும் வரதட்சணையாக வாங்கி கொண்டார்.அதன் பிறகு கல்யாண நாள் நெருங்கும்போது திடீரென்று இப்படி ஆமையும் ,நாயும் கேட்டதால் மணப்பெண்ணின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.
அதனால் அந்த பெண்ணின் தந்தை போலீஸ் ஸ்டேஷன் சென்று மணமகன் 21 கால் நகங்கள் கொண்ட ஆமை , ஒரு கருப்பு லாப்ரடோர் நாய், ஒரு புத்தர் சிலை, ஒரு சமாய் விளக்கு ஸ்டாண்ட் மற்றும் ரூ .10 லட்சம் வரதட்சணை கொடுத்தால்தான் தன் மகளை கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னதை போலீசில் கூறினார். போலீசார் வழக்கு பதிந்து அந்த மாப்பிள்ளை மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்தனர்