மக்கள் நலமுடன் வாழ வேண்டி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் பவித்ர பூஜை நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பவித்ர பூஜை நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர், விநாயகர் போன்ற பஞ்ச மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின் பவித்ர மாலைகள் அணிவித்தும், பருத்தி நூல் ஆடைகள் சுவாமி அம்பாளுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சாற்றப்பட்டு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.