ஆசிய கடலுக்கு 2 போர்க்கப்பல்களை அனுப்பிய பிரித்தானியாவின் செயலுக்கு சீனா வன்மையாக எச்சரித்துள்ளது.
பிரித்தானியா நாட்டின் பாதுகாப்பு செயலாளர் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் இந்த வார தொடக்கத்தில் 2 போர்க்கப்பல்களை நிரந்தரமாக ஆசிய கடலுக்கு அளிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டமானது ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் அமெரிக்காவுடனான செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்காக பிரித்தானியாவை சீனா கடுமையாக எச்சரித்துள்ளது. அதில் “சீனாவைச் சுற்றியுள்ள கடலின் சர்வதேச சட்டத்தின் படி கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து சுதந்திரத்தை மதிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் Zhao Lijian கூறியுள்ளார்.
ஆனால் பிரித்தானியா தனது ராணுவ பலத்தை காட்டும் செயலை சீனா வன்மையாக எதிர்கிறது. மேலும் போர்க்கப்பல்களை அனுப்பிய செயலானது சீனாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறைவாக மதிப்பிடும் எண்ணமாகும். மேலும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்த தன்மைக்கு ஊறு விளைவிக்கும்” என்று கூறியுள்ளார்.