டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளான இன்று வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நடைபெற்றது . இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 6 அம்புகள் என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். இந்தச் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 13 முறை சரியாக இலக்கை குறிவைத்து அம்புகளை எய்தார்.
இதனால் அவர் 663 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதையடுத்து 680 புள்ளிகளுடன் கொரிய வீராங்கனை அன் சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதையடுத்து வருகின்ற 28-ஆம் தேதி நடைபெற உள்ள நாக்-அவுட் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, பூடான் நாட்டை சேர்ந்த வீராங்கனை கர்மாவுடன் மோதுகிறார்.