தடை செய்யப்பட்ட நிலையில் பட்டாசு உற்பத்தி செய்ததால் ஆலை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வி.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தடைசெய்யப்பட்ட ஒரு ஆலையில் 8 ஆண்களும், 8 பெண்களும் பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ஆமத்தூர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர் அருண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.