அகழ்வாராய்ச்சியில் முது மக்களின் தாழி முழு உருவத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆராய்ச்சியில் முதுமக்களின் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் முது மக்களின் தாழி சேதாரமில்லாமல் முழு உருவத்தில் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அழகிய சுடுமண் குடம் ஒன்றும் கிடைத்துள்ளது. இது முது மக்களின் அரும் பொருளாக கருதப்படுகிறது. மேலும் ஆராய்ச்சியில் இன்னும் அதிகமான பொருள்கள் கிடைக்கும் என்றும், அவை விரைவில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்