Categories
ஆட்டோ மொபைல்

கார் வாங்க போறீங்களா…? அப்ப அதுக்கு முன்னாடி…. நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே  பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பயன்படுத்திய கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும்போது நீங்கள் முக்கியமான சில விஷயங்கள் கவனிக்க வேண்டியது உள்ளது.

அவை என்னவென்றால் வாகனத்தின் வகை, தயாரிக்கப்பட்ட வருடம், வாகனத்தில் பராமரிப்பு செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்க வேண்டும். இணையதளத்திலும் வாகனங்களுக்கான விற்பனை அறிவிப்பகள் தற்போது வருகிறது. அவற்றை பார்த்து விட்டு விட்டு வாகனம் வாங்க வேண்டும். சில நேரம் மிகக் குறைந்த விலையில் நல்ல தரமான வாகனம் உங்களுக்கு கிடைக்கும். ஏதோ அவசரத்தில் எதையும் பார்க்காமல் வாங்கி விடக்கூடாது. வாகனத்தின் வயது (தயாரிக்கப்பட்ட வருடம் முதல் இப்போது வரை) எத்தனை வருடங்கள் ஆகி இருக்கிறது என்பது முக்கியம். ஏனெனில் இரண்டு முதல் மூன்று வருடத்திற்கு மேற்பட்ட வாகனமாக இருந்தால் வங்கிகள் கடன் வழங்க தயாராக இருக்காது.

எனவே நீங்கள்  வாங்கும் காரின் வயது மற்றும் நிலை குறித்து கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்க விரும்பும் வாகனத்தை வாங்குவதற்கு முன்பு காரின் பதிவு சான்றிதழ், காப்பீடு ஆட்சேபனையில்லா சான்றிதழ், மாசுக்கட்டுப்பாட்டு  சான்றிதழ் ஆகிய அனைத்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். வாகனம் வாங்கியதும் முதலில்  அதற்கான காப்பீட்டுத் தொகையை விற்பனையாளரிடம் இருந்து உங்களுடைய பெயருக்கு மாற்றுவது நல்லது.

Categories

Tech |