மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை ஓட்டம் செய்யப்ப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மாருதி சுசுகியின் XL5 காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது புதிய XL5 வேகன்ஆர் மாடலின் பிரீமியம் வெர்ஷன் ஆகும். இந்த காரின் விற்பனை மாருதியின் நெக்சா விற்பனையகங்களில் விற்பனையாக உள்ளது. மேலும், இந்த புதிய வேகன்ஆர் XL5, வேகன்ஆர் மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் முதன்முதலில் மாருதி சுசுகியின் வேகன்ஆர் கார் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களை கொண்டிருந்ததால் வேகன்ஆர் கார் இந்திய சந்தையில் மிக பிரபலமானது. ஆகையால், இன்றளவும் மாருதி வேகன்ஆர் இந்தியாவில் பிரபல காராக உள்ளது. இந்நிலையில், XL5 காரின் சோதனை ஓட்ட புகைப்படத்தின் மூலம் இந்த ஸ்டான்டர்டு வேகன்ஆர் மாடலை விட உயரமாக இருக்கும் என தெரிகிறது.
இதனுடன் அலாய் வீல்கள், பிரமான்ட பம்ப்பர், மற்றும் டெயில்கேட் மினிமலிஸ்ட் வடிவமைப்பு மற்றும் தடிமனான க்ரோம் லிப் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் இருக்கைகள் வசதி மேம்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.