அஸ்வினின் குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் இதற்கு முன் சீரியல்களிலும், சில குறும்படங்களிலும் நடித்திருந்தார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வினுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனிடையே இவர் நடிப்பில் குட்டி பட்டாஸ், கிரிமினல் கிரஷ், லோனர் போன்ற ஆல்பம் பாடல்கள் வெளியாகியிருந்தது.
100M Pure L🧡VE !
Thankful to the whole Kutty Pattas team 🤩
And finally to my people 🔥#AK #peopleslove ❤️ pic.twitter.com/HmFYhTCxc2— Ashwin Kumar (@i_amak) July 22, 2021
இதில் வெங்கி இயக்கத்தில் அஸ்வின், ரெபா மோனிகா நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . சந்தோஷ் தயாநிதி இசையமைத்த இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில் குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதனை அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.