சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிள்ளனூர் பகுதியில் வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். அதன் பின் அவர்களிடம் இருந்த 150 சீட்டுக் கட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.