இத்தாலியில் சினிமாக்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் க்ரீன் சான்றிதழை மக்கள் கட்டாயம் காட்ட வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இத்தாலி அரசு சினிமாக்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட உட்புற இடங்களில் டிஜிட்டல் கரீன் சான்றிதழை பயன்படுத்தி மக்கள் நுழையவேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த விதி ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உட்புற இடங்களில் 12 வயதிற்கு மேற்பட்டோர் நுழையும்போது கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சோதனை முடிவு, குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்றிலிருந்து மீண்டதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தாலிய பிரதமர் Mario Draghi ஐரோப்பிய ஒன்றிய சான்றிதழ் திட்டத்தின் பயன்பாட்டை இத்தாலியில் வணிகங்களை திறந்து வைப்பதற்காக விரிவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இத்தாலி அரசு உள்நாட்டு பொது போக்குவரத்தின் போது ஆளும் கூட்டணியின் கருத்து வேறுபாட்டிற்கு பிறகு பாஸ் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இத்தாலியில் 2 டோஸ் தடுப்பூசியை கிட்டத்தட்ட பாதி பேர் போட்டுள்ளதாகவும், இருப்பினும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.