பாகிஸ்தான் அரசு, தற்போதுவரை நாட்டில் 10 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான், உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் 10 லட்சத்தை கடந்த 30 ஆவது நாடாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 1425 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 11 நபர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை 22,939 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தேசிய மருத்துவ மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் இந்த 10 லட்சம் நபர்களில், மருத்துவ சிகிச்சையில் 53,623 நபர்கள் இருக்கிறார்கள். மீதமுள்ள 9,23,472 நபர்கள் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மீண்டும் கொரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்திருக்கிறது.