Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’… பரபரப்பான டிரைலர் ரிலீஸ்…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு  உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகிறது.

சிக்ஸர் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மினி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பினாய் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் திட்டம் இரண்டு படத்தின் பரபரப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . மேலும் அதில் வருகிற ஜூலை 30-ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |