ஓகினோவா நிறுவனத்தின் புதிய பேட்டரி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒகினோவா நிறுவனம் பிரைஸ் புரோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ.71,900 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதில் 2 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியும், ஒரு கிலோவாட் டி.சி. எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோட்டார் வாட்டர் ஃப்ரூப் தன்மை கொண்டது. இந்த ஸ்கூட்டரின் எகானமி 30 முதல் 35 கி.மீ, ஸ்போர்ட் 50 முதல் 60 கி.மீ, டர்போ 65 முதல் 70 கி.மீ ஆகிய மூன்று டிரைவிங் மோட்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி எகானமி 88 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையில் ஓடக்கூடியது. குறிப்பாக வீடுகளில் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் சார்ஜிங் சாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஷாக் அப்சார்பர், பின்பகுதியில் இரண்டு பக்கமும் ஷாக் அப்சார், அலாரம் வசதி, ஸ்கூட்டரை கண்டறியும் வசதி, யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, நடந்து கொண்டே தள்ளிச் செல்லும் வசதி மற்றும் ரிவர்ஸ் கியரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒகினோவா பிரைஸ் புரோ ஸ்கூட்டர் கிளாஸி ரெட் பிளாக் மற்றும் ஸ்பார்க்கிள் பிளாக் என இரண்டு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.