Categories
சினிமா தமிழ் சினிமா

நான் 3 அல்ல, 4 அல்ல…. 40 திருமணம் கூட செய்வேன்…. வனிதா பரபரப்பு பேட்டி…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா ‌. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் வனிதா பவர்ஸ்டாருடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானதையடுத்து, 4 வதாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. இதனையடுத்து தற்போது வனிதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆதில், ஆண்களுக்கு 4,5 திருமணம் நடந்தால் அதை யாரும் பேசுவதில்லை, பெண்கள் செய்தால் பேசுகின்றனர். நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், எதற்கும் அச்சப்பட மாட்டேன். எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பகிர்வேன். பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படம் திரைப்படத்துக்கானது. விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |