Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இப்படி தேர்வு நடத்த கூடாது…”மாணவர்கள் தொடர்ந்த வழக்கு”…. நீதிமன்றம் உத்தரவு….!!

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொறியியல் படிப்பில் ஒரு செமஸ்டரில் தோல்வியடையும் ஒரு மாணவர் மூன்று வாய்ப்புகளில் தேர்ச்சியடையாவிட்டால் அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என்பது அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை. இந்த விதி முறையை ரத்து செய்ய கோரி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.  மேலும் வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |