Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் சரி ஆகல… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மையகவுண்டம்பட்டியில் மணிரத்தினம் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயசுதா வெகு காலமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து இதற்காக அவர் பல்வேறு சிகிச்சை பெற்றும், மருந்துகளை எடுத்தும் சரியாகவில்லை. இதனால் ஜெயசுதா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து விரக்தியடைந்த ஜெயசுதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் காவல்துறையினர் ஜெயசுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மனைவி இறந்ததால் மணிரத்தினம் மிகவும் மனமுடைந்து காணப்படுகின்றார்.

Categories

Tech |