தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் பலரும் இணையதளத்திலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் வேடிக்கையான சில விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் குரங்கு குட்டி ஒன்று தன் தாயின் வாலைப் பிடித்து உயரமான ஒரு சுவரின் மீது ஏறும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் தாய் குரங்கு ஒன்று முட்டாக கட்டப்பட்டுள்ள சுவரின் மீது ஏறி விடுகிறது. ஆனால் அதன்பின் ஏற முயன்ற குட்டி குரங்கு தான் சிறியதாக இருப்பதன் காரணமாக ஏறமுடியவில்லை. இதை பார்த்த குட்டி குரங்கு என்ன செய்வதென்று யோசித்து பின்னர் தன்னுடைய தாயின் வாலைப் பிடித்து மேலே ஏறிச் செல்ல முயற்சி செய்கிறது .
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதையுமே நம்முடைய வாழ்க்கையில் முயற்சி செய்தால் மட்டுமே நாம் நினைத்த இடத்தை அடைய முடியும். நாம் நினைத்த காரியம் முடியம் வரை முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
https://twitter.com/i/status/1413539155246817280