மத்திய சீனாவில் பெய்த கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை கடந்த 1000 வருஷத்தில் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்துள்ளது.
இவ்வாறு பெய்த கனமழையால் ஹெனான் மாவட்டத்திலுள்ள பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி இதில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இதற்கிடையே வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து 3.76 லட்சம் பேர் பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.