தமிழகத்தில் ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க இயக்கம் 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வழங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் (ஜூலை 23 முதல்) நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.startuptn.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20.8.2021 ஆகும். ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் StartupTN தமிழ்நாடு ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையதாகும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் [email protected] – க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories