17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேலைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கும், பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பமான அந்த சிறுமியுடன் பாரதிக்கு அவரது உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.