பச்சிளம் பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மதிகோன்பாளையம் பகுதியில் கார் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகாசினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது புரை ஏறி திடீரென குழந்தை மயக்கமாகி விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தை திடீரென உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.