Categories
தேசிய செய்திகள்

பேருந்துகளில் இனி… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக பேருந்துகளிலேயே இனி சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணித்து திருப்பதி செல்லும் பக்தர்கள் திருமலையில் சிறப்பு தரிசனம் செய்ய விரும்பினால் அதற்கான டிக்கெட்டுகள் பஸ் டிக்கெட் உடன் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்தது. கொரோனா காரணமாக இந்த வசதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது பல மாநிலங்களிலிருந்து திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பேருந்துகளிலேயே இனி சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரி, பெங்களூரில் நகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகளில் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |