Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாரு தூக்கிட்டு போயிருப்பா….? உரிமையாளர் அளித்த புகார்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஏழு ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து வேல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேலுக்கு சொந்தமான ஆட்டை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |