சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்பயா பெண்கள் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மையம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களிலும் இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளனர்.
மேலும் 181 என்ற இலவச எண்ணிற்கு உதவி மையத்தில் பெண்கள் சிலர் ஆலோசனை பெறலாம். பெண் கொடுமை, வரதட்சனை, குழந்தைத் திருமணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சட்ட ஆலோசனை, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ உதவி, வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு இந்த எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.