Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! திருப்பங்கள் உண்டாகும்….! எச்சரிக்கை வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். 

இன்றைய நாள் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். உங்கள் மனதிற்கு என்ன பிடிக்குமோ அதை உங்களால் வாங்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும். மந்தமான போக்கை நீங்கள் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்திருக்கும்போது சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். பொறுப்புகள் கூடிவிடும். எதையும் எச்சரிக்கையாக பேச வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் சில சிரமங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

திருமணத்திற்காக வெகுநாட்கள் காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கண்டிப்பாக கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழல் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நம்பிக்கையுடன் உங்கள் பணியை தொடர வேண்டும். உற்றார் உறவினர்களால் சந்தோஷம் கிடைக்கும். காதல் பிரச்சினையை கொடுத்தாலும் சரியாகிவிடும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |