கும்பம் ராசி அன்பர்களே.! இன்று நீங்கள் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சு வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே கோபம் தலைதூக்கும். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு பின்னர் முடிவெடுக்க வேண்டும். மகிழ்ச்சியான சூழல் கண்டிப்பாக இருக்கின்றது. விட்டுக்கொடுத்து செல்வீர்கள். அக்கம்பக்கத்தினர் அன்பு கொள்வார்கள். நிதானமான போக்கு இருக்கும். துணிவு இருக்கும். மனதில் தைரியம் இருக்கும். வரவேண்டிய பணம் கண்டிப்பாக கையில் வந்து சேர்ந்துவிடும். தாராள பணவரவு இருக்கும். கையில் காசு புரளும். இன்று நீங்கள் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும். வேலைப்பளு குறைந்து முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மனதில் ஒருவித நம்பிக்கை அதிகரிக்கும். தைரியமாக எந்த ஒரு விஷயத்திலும் போராடலாம். குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதர சகோதரிகளின் சச்சரவு நீங்கிவிடும். கலகலப்புக்கு குறைவிருக்காது. மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். விளையாட்டிலும் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதில் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை