பாரத் இணைய சேவை மூலம் தமிழ்நாட்டில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு 1,815 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
பாரத் இணைய சேவை திட்டம் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பாரத் பைபர் கேபிள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளிலும் பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் பைபர் கேபிள் வசதியை 55,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் வினாடிக்கு ஒரு ஜிபி அளவு வேகத்துடன் கூடிய இணைய சேவை வழங்கப்பட உள்ளது.
பாரத் இணைய சேவை மற்றும் மாநில அரசின் தமிழ் இணைய சேவை_க்கு தமிழக அரசு 2, 411 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் ஏற்கனவே கேட்டு இருந்தது.ஆனால் மத்திய அரசின் டிஜிட்டல் தகவல் தொடர்பு துறை பாரத் இணைய சேவை திட்டத்திற்கு 1, 815 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பாரத் இணைய சேவை பூர்த்தி ஆகும் போது தமிழகத்தில் 12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கு தகவல் தொடர்பு சேவை கிடைக்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.அரசு சார்ந்த சேவைகள் கல்வி , பொழுதுபோக்கு போன்றவர்களுக்கு இந்த கேபிள் மூலமும் பயன்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 ஆயிரம் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இணைய சேவைகளை வழங்க இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.