மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டிலுள்ள மிகவும் மோசமான சிறையிலிருக்கும் கைதிகள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான கருத்தை தெரிவிப்பதற்கு சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.
மியான்மர் நாட்டில் நடந்துவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே மியான்மரிலுள்ள யாங்கூன் நகரிலிருக்கும் இன்சைன் என்னும் சிறை மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்சைன் சிறையிலுள்ள கைதிகள் மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக சுமார் 2 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் அரசாங்கத்திற்கு எதிராக தங்களுடைய கோஷங்களையும் எழுப்பியுள்ளார்கள் என்று அருகிலிருக்கும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு சிறைக்கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைக்குள் ராணுவ வாகனம் சென்றதாகவும் அருகிலிருப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இது தொடர்பான கருத்தை சிறை நிர்வாகம் தெரிவிப்பதற்கு மறுத்துள்ளது.