Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் பயங்கரவாதிகள்…. திணறி வரும் ராணுவ படைகள்…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் மீது அமெரிக்கா விமானப் படையின் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளார்கள்.

அதாவது தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல மாவட்டங்களையும், பக்கத்து நாடுகளின் முக்கிய எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றியுள்ளார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் ராணுவம் திணறி வரும் நிலையில் அமெரிக்கா தலீபான்களின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசாங்கத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் உதவி புரிவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்களின் மீது கடந்த சில தினங்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |