விளாத்திகுளத்தில் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த காதலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததும் தனது காதலை முறித்துக் கொண்டார் அப்பெண். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி காதலர் இசக்கி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்லலாம் என்று கூறி அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது நண்பர்கள் 3 பேரும் வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அந்த இடத்தில் இருந்து தப்பித்துள்ளார். ஆனால் இது பற்றி யாரிடமும் அப்பெண் தெரிவிக்கவில்லை.
அதன்பின் வீட்டிற்கு வந்த அந்தப் பெண் நடந்தவற்றையெல்லாம் தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் செய்த ராமலிங்கம், சுரேஷ்குமார், அழகுராஜ், ராமச்சந்திரன் ஆகிய 4 பேர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். முன்னாள் காதலர் உட்பட 4 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.