நடிகர் விஜய் யார் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி பேசுகிறார் என தெரியவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை விஜய் சீண்டிய விஜய் யாரை எங்கே வைக்கவேண்டுமோ அவர்களை அங்கே வைக்கவேண்டுயமென்றும் தெரிவித்தார்.
நடிகர் விஜயின் இந்த கருத்துக்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.விஜயின் கருத்து குறித்து அதிமுகவின் அமைச்சர் கடம்பூர் ராஜீ கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது , யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் மக்கள் வைத்துள்ளனர்.விஜய் போன்றவர்கள் பேச்சைக் கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியது இல்லை. நடிகர்கள் படம் ஓடுவதற்கு பரபரப்புக்காக பேசுகிறார்கள். விஜய் யாருடைய பேச்சைக் கேட்டு பேசினார் என தெரியவில்லை என்று விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.