நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், அடுத்த 2 நாட்களில் 8 கிலோமீட்டர் வரை தென் மேற்கு திசையில் காற்று வீசும் என கூறியுள்ளனர். இதனையடுத்து 8 மி.மீட்டரில் இருந்து 10 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் காணப்படும். இதனைத்தொடர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனங்களில் மற்றும் குடிநீரில் உரிய கிருமி நாசினியை பயன்படுத்தி வழங்க வேண்டும் என கால்நடை துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.