ஐரோப்பிய மருந்து நிறுவனம் அமெரிக்க நாட்டின் கொரோனா குறித்த மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைவருக்கும் தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா குறித்த பெரும்பாலான தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் 12 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடு கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்படும் மாடர்னா தடுப்பூசியை சுமார் 3,700 க்கும் அதிகமான 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்துள்ளது.
இந்தப் பரிசோதனையின் முடிவில் வழக்கமாக 18 வயதிற்கு மேலானவர்களுக்கு மாடர்னா தடுப்பூசியை செலுத்தும்போது உருவாகும் ஆன்டிபாடிகளை போலவே 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி ஆன்டிபாடிகளை உருவாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் இந்த மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அமெரிக்காவின் மருந்துகள் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.