Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டிரான்ஸ்பார்மரில் ஏறிய தொழிலாளி…. நடந்த துயர சம்பவம்…. வேலூரில் சோகம்….!!

டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள அல்லிபுரம் கிராமத்தில் வேல்முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் மின் தடை ஏற்படும் போது பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சரி செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேல்முருகனிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வேல்முருகன் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் சப்ளையை சரி செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் இருந்து வேல்முருகன் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |