Categories
மாநில செய்திகள்

BREAKING: 9 முதல் 12ம் வகுப்பு வரை… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்பட நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடல்கள் பதிவிட்டு வருகின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்களை இரண்டு பருவங்களாக பிரித்து செயல்படுத்த சிபிஎஸ்சி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது சிபிஎஸ்சி புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

மேலும் பாடத்திட்டங்கள் ஏற்கனவே இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ள நிலையில் எழுத்துத் தேர்வு செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களும் இரண்டாக பிரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இரண்டு பருவத்திலும் பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் 50 சதவீதமாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் www.cbscacademic.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |