பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாபா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது மீண்டும் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.