சமீரா ரெட்டி தனது மகளுடன் இருக்கும் புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டிக்கு முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கிடைத்தது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிட்டியது. அதன் பின்னர் அவருடைய ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் அனைத்து மொழி படங்களிலும் சமீரா ரெட்டி ஹிட் கொடுக்க தொடங்கினார்.
ஆனால் சமீபத்தில் சினிமாவிலிருந்து விலகிய சமீரா ரெட்டி தொழில் துறையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இருப்பினும் சமூகவலைதளங்களில் அவ்வப்போது சமீரா ரெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சமீரா ரெட்டி தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.