நடிகை ஹன்சிகாவின் மஹா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் ‘மஹா’. இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் பிரபல நடிகர் சிம்பு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
#maha #hansika50th pic.twitter.com/iXHSLufOUb
— Hansika (@ihansika) July 23, 2021
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மஹா படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹா படத்தின் போஸ்டர்கள் வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திற்கு எப்படி யு/ஏ சான்றிதழ் கிடைத்தது என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.