Categories
தேசிய செய்திகள்

வெடிச்சத்தம் கேட்டு… கல்யாண மாப்பிள்ளையோடு ஓட்டம் பிடித்த குதிரை… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தானில் திருமண ஊர்வலத்தில் குதிரைமீது மணமகன் அமர்ந்திருந்தபோது வெடி வெடித்ததால் குதிரை மணமகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் வைரலானது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சமீபத்தில் ஒரு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த திருமணத்தில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஊர்வலம் வெகுநேரம் நன்றாக சென்று கொண்டு இருந்தபோது, திடீரென்று யாரோ வெடி வெடித்து உள்ளனர். அந்த வெடி சத்தத்தை கேட்ட குதிரை தலை தெறிக்க ஓடத் தொடங்கியது. குதிரையின் மீது மணமகன் அமர்ந்திருக்கிறார். அவரையும் கூட்டிக் கொண்டு குதிரை ஓடியது.

மணமகன் குதிரையை நிறுத்த முயன்றும் குதிரை நிற்கவில்லை. இதையடுத்து உறவினர்கள் மணமகனை பத்திரமாக மீட்க தங்களது கார் மற்றும் பைக்குகளில் குதிரையை துரத்தின. சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் வேகமாக சென்ற குதிரை பின்னர் தன் வேகத்தை குறைத்தது. அதன் பின்பு குதிரைக்கு பின்னால் வந்தவர்கள் மணமகனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் செல்போன் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |