கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 156 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இதனையடுத்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் மருத்துவர் கோகுல பிரியா, சுகாதார ஆய்வாளர் ராகவன், சமுதாய நல செவிலியர் பழனியம்மாள், பகுதி சுகாதார செவிலியர் சரஸ்வதி, கிராம சுகாதார செவிலியர் கீர்த்திகா போன்றோர் அடங்கிய குழுவினர் 156 நபர்களுக்கு தடுப்பூசியை செலுத்தினர்.