பட்டாசு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் காமராஜர் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசுகளை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தொழிலில் ரவிச்சந்திரன் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை வியாதி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அனுப்பன்குளம் அகதிகள் முகாம் அருகில் உள்ள ஒரு ரேஷன் கடை முன்பு குருணை மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.